ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம் விபத்து, கொரோனா பரவல், கமல்ஹாசனின் அரசியல் பணிகள் போன்ற காரணங்களால் பல மாதங்களாக முடங்கி உள்ளது. இதனால் படத்தில் இருந்து இயக்குனர் ஷங்கர் விலகிவிட்டதாக தகவல் வெளியானது. இதனை படக்குழுவினர் மறுத்துள்ளனர். சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.
அதற்கு முன்பாக தெலுங்கு படமொன்றை இயக்க ஷங்கர் தயாராகி உள்ளார். இந்த படத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க தென்கொரிய நடிகை பேசூஜியிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
Related Tags :