களவு படத்தை இயக்கிய முரளி கார்த்திக், அடுத்ததாக இயக்கும் மோகன்தாஸ் படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்து வருகிறார்.
நடிகர் விஷ்ணு விஷால் அடுத்ததாக நடிக்கும் படம் மோகன் தாஸ். களவு படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இப்படத்தை இயக்குகிறார். இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். உண்மைக்கதையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் நடிகர் ஷாரிக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர். அதுமட்டுமின்றி இவர், நட்சத்திர தம்பதிகளான ரியாஸ் கான் மற்றும் உமா ரியோஸ் ஆகியோரது மகன் என்பது குறிப்பிடத்தக்கது.