கேரளாவில் முக கவசம் தயாரிப்போர் காங்கிரஸ், கம்யூனிஸ்டு மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளின் சின்னங்களுடன் கூடிய முக கவசங்களை தயாரித்து உள்ளனர்.
கேரள சட்டசபைக்கு ஏப்ரல் 6-ந் தேதி தேர்தல் நடக்கிறது
தேர்தலை சந்திக்க அனைத்து கட்சியினரும் தயாராகி வருகின்றனர். வாக்காளர்களை கவர வித்தியாசமாக என்ன செய்யலாம் என்றும் யோசித்து வருகிறார்கள்.
தேர்தலுக்கு இன்னும் 26 நாட்களே இருக்கும் நிலையில் பிரசாரத்திற்கு செல்லும் கட்சியினருக்கு தேர்தல் கமிஷன் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.
கேரளாவில் கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இதனால் பிரசாரத்திற்கு செல்வோர் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இதையடுத்து அனைத்து கட்சியினரும் தங்கள் கட்சிகளின் சின்னங்களுடன் முக கவசங்கள் தயாரித்து உள்ளனர். அதனை அணிந்தபடியே அவர்கள் வாக்குகேட்க செல்கிறார்கள்.
இதனால் கேரளாவில் முக கவசம் தயாரிப்போர் மகிழ்ச்சியில் உள்ளனர். அவர்கள் காங்கிரஸ், கம்யூனிஸ்டு மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளின் சின்னங்களுடன் கூடிய முக கவசங்களை தயாரித்து உள்ளனர். இவை வேகமாக விற்பனை ஆவதாக முக கவச தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.