திருமால் எடுத்த அவதாரங்கள் தசாவதாரங்கள் என போற்றப்படுகின்றன். அந்த வகையில் இன்று மச்ச அவதாரத்திற்கான தியான ஸ்லோகத்தையும், மூலமந்திரத்தையும் அறிந்து கொள்ளலாம்.
திருமால் எடுத்த மச்ச அவதாரம்
திருமால் எடுத்த மச்ச, கூர்ம. வராஹ. நரசிம்ம. வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண, அவதாரங்களோடு இனி எடுக்கப்போகும் கல்கி அவதாரமும் சேர்த்து தசாவதாரங்கள் என போற்றப்படுகின்றன். அந்த அவதாரங்களின் தியான ஸ்லோகங்களையும் மூலமந்திரங்களையும் அபூர்வ ஸ்லோகமாய் வழங்குகிறோம்.
மத்ஸ்யாநநம் ஹரிம் தேவம் ஸங்கசக்ரதரம் விபும்
ஸர்வாபரண ஸம்யுக்தம் ஸ்ரீபூநீலாதிபம் பஜே
மூல மந்திரம்
ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் மம் மத்ஸ்யநாதாய நமஹ
மந்திர ஜப பலன்
இந்த மந்திர ஜபத்தினால் சத்ரு பயம் நீங்கி வெற்றி கிடைக்கும். நீர்வளம், நிலவளம் பெருகி மனித வாழ்க்கையில் போக சம்பத்துக்கள் அதிகரிக்கும்.
Leave a Reply
View Comments