இரு பிரிவினர் இடையே பதற்ற நிலையை ஏற்படுத்தும் தகவல் அடங்கிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தெலுங்கானாவின் நிர்மல் மாவட்டத்தில் உள்ள பைன்சா நகரில் மோட்டார் சைக்கிளில் செல்வது தொடர்பாக 2 பிரிவனர் இடையே ஏற்பட்ட மோதல் பயங்கர வன்முறையாக மாறியது. இது தொடர்பாக நடைபெற்ற தாக்குதலில் ஒரு போலீஸ்காரர், ஒரு பத்திரிகையாளர் உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசு பைன்சா நகரில் 144 தடை உத்தரவை அமல்படுத்தியது.
இந்த நிலையில், பொது சொத்துக்கள் சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கும் இரண்டு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் பைன்சா நகரில் முஸ்லீம்களால் நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலுக்கு பின் எடுக்கப்பட்டவை என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
வைரல் புகைப்படங்களை ஆய்வு செய்ததில், இவை பிப்ரவரி 2020 வாக்கில் எடுக்கப்பட்டவை என தெரியவந்துள்ளது. தெலுங்கானாவின் பைன்சா நகரில் வன்முறை ஏற்பட்டது உண்மை தான் என்ற போதும், வைரல் புகைப்படங்கள் சமீபத்திய கலவரத்தில் எடுக்கப்படவில்லை என உறுதியாகி இருக்கிறது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.