கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் உத்தரவுப்படி டிஎஸ்பி விஜயராஜ் மற்றும் டிஎஸ்பி ராஜா தலைமையிலான 2 ஆய்வாளர்கள் கொண்ட போலீசார் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கல்வராயன்மலை பகுதியில் கள்ளத்தனமாக துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் மீது சோதனை நடத்த உத்தரவிட்டு இருந்தனர். இந்த நிலையில் கல்வராயன்மலை இருக்கக்கூடிய தாழ்மருதூர் கிராமத்தில் 4 நாட்டு துப்பாக்கிகளும் அதேபோல கெண்டிக்கல் கிராமத்தில் இரண்டு நாட்டு துப்பாக்கிகள் என மொத்தம் ஆறு நாட்டு துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்தால் குற்றம் எனவும் இது குறித்து காவல் துறையினர் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த நிலையிலும் வீட்டில் நாட்டு துப்பாக்கிகளை பதுக்கி வைத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய எதிரிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் .மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் அனுமதி இன்றியும் சட்டத்திற்குப் புறம்பாகவும் நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருக்கும் மலைவாழ் மக்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கபடும் எனவும் நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் எச்சரித்தார்..
Discover more from Kallakurichi News
Subscribe to get the latest posts sent to your email.