கடவுளே இல்லை என கூறி வந்த திமுகவினர் தற்போது வேல் பிடித்துள்ளனர் என்று பிரசாரத்தின்போது எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பழனியில் அதிமுக வேட்பாளர் ரவி மனோகரனை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் பழனியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.
கடவுளே இல்லை என கூறி வந்த திமுகவினர் தற்போது வேல் பிடித்துள்ளனர் என்றும், திமுகவின் சகாப்தம் முடிவடையும் என்றும் எடப்பாடி பழனிசாமி பேசினார்.