கேடிஎம் நிறுவனத்தின் புதிய ஆர்சி200 மோட்டார்சைக்கிள் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
கேடிஎம் நிறுவனம் தனது ஆர்சி200 மாடலை மேம்படுத்த திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய கேடிஎம் ஆர்சி200 மாடல் சிறு மாற்றங்களுடன் அறிமுகமாகும் என தெரிகிறது. அதன்படி புது மாடலில் காஸ்மெடிக் மற்றும் மெக்கானிக்கல் என இருவிதங்களில் மாற்றங்கள் செய்யப்படலாம்.
மாற்றங்களை பொருத்தவரை புது மாடலில் ஹாலோஜன் ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல் உள்ளிட்டவை டியூக் 200 மாடலில் உள்ளதை போன்று வழங்கப்படுகிறது. இத்துடன் அழகிய தோற்றம் கொண்ட டிஎப்டி டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இது கேடிஎம் 250 அட்வென்ச்சர் மாடலில் உள்ளதை போன்று வழங்கப்படலாம்.
இத்துடன் புது மாடலில் எல்இடி டெயில் லைட்கள், தற்போதைய மாடலில் உள்ளதை போன்ற இன்டிகேட்டர்கள் வழங்கப்படுகின்றன. இந்த மாடல் டிரெலிஸ் சப்-பிரேம் மற்றும் புதிய அலாய் வீல்களை கொண்டிருக்கிறது. சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் செட்டப்களில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கலாம்.
புதிய மாடலிலும் 199சிசி சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு யூனிட் வழங்கப்படுகிறது. இந்த யூனிட் 25 பிஹெச்பி பவர், 19 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.