அதிமுக கூட்டணி உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. கூட்டணியில் தொடரலாமா? அல்லது தனித்து போட்டி முடிவை எடுக்கலாமா? என்பது குறித்து இன்று மாவட்ட செயலாளர்களுடன் தே.மு.தி.க. தலைமை அவசர ஆலோசனை நடத்தியது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
மாவட்ட செயலாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனையை தொடர்ந்து, அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணி உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.