சினிமா செய்திகள்

9-ம் பாகம் ரிலீஸ் தேதியை வெளியிட்ட பாஸ்ட் அண்ட் பியூரியஸ் படக்குழு !!

‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ 9-ம் பாகம்... ரிலீஸ் தேதி அறிவிப்பு

                           பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 9 போஸ்டர்
உலக சினிமாவில் கார் ரேஸ் சம்பந்தமாக பல படங்கள் வந்தாலும் ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ பாகங்களுக்கு ரசிகர்களிடையே தனி மவுசு இருக்கத் தான் செய்கிறது. அந்த வகையில் ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ வரிசையில் இதுவரை 8 பாகங்கள் வெளியாகி இருக்கிறது.
இதில் வின் டீசல், மிச்செல் ரோட்ரிகஸ், ஜோர்டானா ப்ரீவ்ஸ்டார், ஈவா மெண்டஸ், டைரிஸ் கிப்சன், கிரிஸ் பிரிட்ஜஸ், லூகாஸ் பிளாக், சங் காங், கேல் கேடட், ஜேசன் ஸ்டாதம் டுவைன் ஜான்சன், கர்ட் ரசல், நாதாலியா இம்மானுவேல், சார்லஸ் தெரோன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இதில் நடித்த பால் வாக்கர் 7-வது பாகம் உருவாகும் போது கார் விபத்தில் உயிரிழந்தார். இது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தினாலும் இந்த படத்தின் மீதான மவுசு குறையவில்லை.
வின் டீசல்
இந்நிலையில், ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ படத்தின் 9-ம் பாகம் வருகிற ஜூன் மாதம் 25-ந் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக இப்படத்தை கடந்தாண்டு மே மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். கொரோனா பரவல் காரணமாக படத்தின் பணிகள் திட்டமிட்டபடி முடிக்கப்படாததால், படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Show More

Leave a Reply

Related Articles