நமது மாவட்டம்திருக்கோவிலூர்

50 ஆயிரம் மதிப்புள்ள குட்கா, புகையிலை போதைப்பொருள் பறிமுதல் !

மணலூர்பேட்டையில் மணலூர்பேட்டை காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர்கள் அகிலன், செல்வம் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த பகண்டை கூட்டு ரோடு  கிராமத்தைச் சேர்ந்த  சிவக்குமார்( 31) என்பவர் இருசக்கர வாகனத்தில் ரூபாய் 50ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் மணலூர்பேட்டையை சேர்ந்த குட்கா கார்த்தி என்பவரிடமிருந்து குட்கா பொருட்களை வாங்கி வந்துள்ளார். சிவகுமார், மணலூர்பேட்டை கார்த்தி ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிந்து தலைமறைவாக உள்ள கார்த்தியை தேடிவருகின்றனர். மேலும் சிவக்குமாரிடமிருந்து குட்கா மற்றும் மோட்டார் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Show More

Leave a Reply

Related Articles