செய்திகள்தமிழகம்

3வது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்…

அரசு பேருந்து ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் சுமூக முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அரசு பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தம், இன்று மூன்றாவது நாளாக தொடர்கிறது. அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான, புதிய ஊதிய ஒப்பந்தம் போடப்படாததால், இரண்டு நாட்களாக, பேருந்துகளை நிறுத்தி, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பணிக்குச் செல்வோர், மாணவர்கள், நோயாளிகள் என, பல தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அரசு பஸ்கள் மட்டுமே இயங்கும் மாவட்டங்களில், மக்கள் பெரும் அவதிப்பட்டனர்.இந்நிலையில், நேற்று, அரசு நடவடிக்கை எடுக்கும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்காலிக ஓட்டுனர், நடத்துனர் தேர்வு, ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தினரை பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில், அதிகாரிகள் ஈடுபட்டனர். அதனால், இன்றும் வேலை நிறுத்தத்தை தொடர, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

இந்நிலையில், சென்னை, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள, தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில், இன்று முத்தரப்பு பேச்சு நடைபெறுகிறது. இதில் உடன்பாடு எட்டப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஊதிய ஒப்பந்தம் முடியும் வரை, இந்த மாதம் முதல், ஆயிரம் ரூபாய் இடைக்கால நிவாரணம் வழங்கும்படி, போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர்களுக்கு, போக்குவரத்து துறை செயலர் சமயமூர்த்தி, நேற்று உத்தரவிட்டுள்ளார். அதனால் ஏற்படும் கூடுதல் செலவை, அந்தந்த கழகங்களே ஏற்க வேண்டும் எனவும் தெளிவுபடுத்தி உள்ளார்.

Show More

Leave a Reply

Related Articles