கல்விசெய்திகள்

சத்தீஸ்கர் CGBSE 10-ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியீடு…!

கடந்த 2020ல் நடந்த சிஜிபிஎஸ்இ 10-ம் வகுப்பு துணைத் தேர்வில் பங்கேற்ற அனைத்து மாணவர்களும் இப்போது தங்கள் ரோல் எண்ணைப் பயன்படுத்தி முடிவுகளை சரிபார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. 

 சத்தீஸ்கர் இடைநிலைக் கல்வி வாரியம் (Chhattisgarh Board of Secondary Education – CGBSE) தனது அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://cgbse.nic.in/ என்ற வலைத்தளத்தில் 10-ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. கடந்த 2020ல் நடந்த சிஜிபிஎஸ்இ 10-ம் வகுப்பு துணைத் தேர்வில் பங்கேற்ற அனைத்து மாணவர்களும் இப்போது தங்கள் ரோல் எண்ணைப் பயன்படுத்தி முடிவுகளை சரிபார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. 
சிஜிபிஎஸ்இ கடந்த நவம்பர் மாதம் 28ம் தேதி முதல் டிசம்பர் 15ம் தேதி வரை பொது மற்றும் தொழிற்கல்வி படிப்புகளுக்கான உயர்நிலை தேர்வுகளையும், நவம்பர் 28ம் தேதி முதல் டிசம்பர் 9ம் தேதி வரை உயர்நிலைப் பள்ளி தேர்வை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த துணை தேர்வுகளுக்கான முடிவுகளை தனது அதிகாரபூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை கீழ்காணும் வழிமுறைகளை பயன்படுத்தி பார்க்கலாம்.

1) சிஜிபிஎஸ்இ துணைத் தேர்வில் கலந்து கொண்டவர்கள் சத்தீஸ்கர் வாரியத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான cgbse.nic.in – ல் உள்நுழைய வேண்டும்.

2) முகப்புப்பக்கத்தில், நோட்டிபிகேஷன் திரைக்கு சென்று, ‘தேர்வு முடிவு- உயர்நிலை துணைத் தேர்வு’ (exam result- Higher secondary supplementary exam) என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.

3) அதில் ஒரு புதிய பக்கம் திறக்கப்படும், அதில் 10 வகுப்பு மாணவர்களின் ரோல் நம்பர் மற்றும் தேவையான பிற விவரங்களை உள்ளிடவும்.

4) பிறகு Submit என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.5) இறுதியில் சத்தீஸ்கர் வாரிய உயர்நிலை துணை தேர்வு முடிவுகள் காண்பிக்கப்படும். அதன் நகலைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சத்தீஸ்கர் வாரியம் நடத்தும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளையும் இதே வலைதளத்தில், இதே வழிமுறைகளை பின்பற்றி நேரடியாக சரிபார்த்துக் கொள்ளலாம். இதற்கிடையில், சிஜிபிஎஸ்இ வாரியம் 12ம் வகுப்புக்கான துணைத் தேர்வு முடிவுகளையும் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தங்களது 12 வகுப்பு சிஜிபிஎஸ்இ கம்பார்ட்மெண்ட் தேர்வு முடிவுகளை சரிபார்க்க மேலே குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு அவர்களின் மெயின் போர்டு தேர்வில் துணை அல்லது கம்பார்ட்மெண்ட் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகள் மூலம் மாணவர்கள் தங்கள் மதிப்பெண்ணை மேம்படுத்தலாம் மற்றும் துணைத் தேர்வுகளை எழுதுவதன் மூலம் பேக்லாக்கை தவிர்க்கலாம். சத்தீஸ்கர் சிஜிபிஎஸ்இ வாரியம் ஜூன் மாதம் 23-ம் தேதி 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான 2020-வாரிய தேர்வு முடிவுகள் வெளியிட்டது. அதில் மொத்தம் 73.62% மாணவர்கள் 10ம் வகுப்பு வாரிய தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 2019 உடன் ஒப்பிடும் போது 5 சதவீதம் அதிகரித்துள்ளது. 12ம் வகுப்பில், மொத்தம் 78.59% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 12ம் வகுப்பு மாணவர்கள் 78.4% தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles