கல்விசெய்திகள்

பொங்கல் விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை திறப்பு இன்று முதல் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு!

பொங்கல் விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை திறப்பு குறித்து பெற்றோர்களிடம் இன்று முதல் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை பொங்கல் விடுமுறைக்கு பிறகு திறக்கலாமா என்பது பற்றி பெற்றோரிடம் கருத்து கேட்க பள்ளிக் கல்வித்துறைக்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இதனையடுத்து, இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை பள்ளிகளில் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழக அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து கருத்து கேட்புக் கூட்டத்தில் பெற்றோர்கள் பங்கேற்கவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன் காணொலி மூலம் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் மற்றும் ஆணையர் ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles