மருத்துவம்பெண்கள் மருத்துவம்

தொப்பை வைத்திருக்கும் பெண்களுக்கான குறிப்புகள்!

உடல் எடை இருக்கோ இல்லையோ ஆனா தொப்பை தான் அதிகமா இருக்கு என்று சலித்துகொள்ளும் பெண்களுக்கான சிறந்த குறிப்பு குறித்து பார்க்கலாம்.
 
நாம் எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும் வயிற்று கொழுப்பு தான் குறையாத ஒன்றாக உள்ளது. ஆண்களுக்கு மட்டும் தொப்பை இருப்பதில்லை. பெண்களும் கூட இந்த தொப்பை பிரச்சினையை சந்திக்கின்றனர். அதே நேரம் ஆண்களை மாதிரி இவர்களுக்கு உடல் எடையை குறைக்க நேரம் கிடைப்பதில்லை. ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்யவோ அல்லது டயட் மேற்கொள்ளவோ பெரும்பாலான பெண்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. மேலும் குழந்தை பெற்ற பிறகு அவர்களின் உடல் எடையும் பல காரணங்களால் அதிகரிக்க தொடங்குகிறது.
குறிப்பாக வயதான பெண்கள் இந்த உடல் கொழுப்பு பிரச்சினையை சந்திக்கின்றனர். மாதவிடாய் நின்ற பிறகு பெண்களின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் வீழ்ச்சியால் உடல் கொழுப்பு வடிவங்கள் மாற்றம் பெறுகிறது. இதனால் பெண்கள் பேரிக்காய் வடிவத்தில் இருந்து ஆப்பிள் வடிவத்தில் மாற்றம் பெறுகிறது. இதனால் பெண்களின் கச்சிதமான உடல் அழகு மாற்றம் பெறுகிறது. அதனால் உணவுகளில் செலுத்த வேண்டிய கவனம் குறித்து தெரிந்துகொள்வது நல்லது.

​தொப்பை வயிறு தரும் பிரச்சனை

கல்லீரலில் இருக்கும் கொழுப்பு வளர்சிதை மாற்றம் அடைந்து இறுதியில் இரத்த கொழுப்பாக மாறும். இது தமனிகளில் சேர்க்கப்படுகிறது. இது தமனியை அடைத்து ஆஞ்சினா, இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் பிற இதய அறிகுறிகளுக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர் கூறுகிறார்.

இந்த கொழுப்பே இதய நோய், டைப் 2 நீரிழிவு நோய், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் போன்ற பிரச்சினைகளை உண்டாக்குகிறது. அதனால் பெண்கள் தங்கள் கொழுப்பை கரைக்க ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறும் கீழ்க்கண்ட விஷயங்களை கடைப்பிடிக்கலாம். அது குறித்து முழுமையான புரிதல் இருந்தால் உங்கள் தொப்பையை குறைக்கலாம்.

​புரதம் உள்ள உணவுகள்

புரதச்சத்து உணவுகள் கோழி இறைச்சி, மாட்டிறைச்சி, முட்டை, சால்மன், பீன்ஸ், சீஸ், புரோட்டீன் பவுடர், டோஃபு மற்றும் பாலாடைக்கட்டி ஆகியவை அடங்கும். மீன், கோழி மற்றும் பீன்ஸ் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகள், தொப்பை கொழுப்பைக் குறைக்கவும், எடை குறைக்கவும் உதவுகின்றன.

 

நியூயார்க் பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து துணை பேராசிரியர் இது குறித்து கூறுகையில் ஆண்களை விட பெண்களுக்கு உடல் எடையை குறைக்க கடினமாக உள்ளது. புரோட்டீன் உணவுகளை எடுப்பது உங்களை நீண்ட நேரம் நிரம்பிய உணர்வை தரும். புரதம் ஜீரணிக்க உங்கள் உடலில் இருந்து அதிக கலோரியை எடுத்துக் கொள்ளும். இது உங்களுக்கு உடல் எடையை குறைக்க பயன்படுகிறது

​செயற்கை சர்க்கரை தவிருங்கள்

நாம் உண்ணும் சர்க்கரை பெரும்பாலும் கொழுப்பாகவே சேமிக்கப்படுகிறது.உடல் ஆற்றல் போக மீதமுள்ளவற்றை கொழுப்பாகவே சேமிக்கிறது. நீங்கள் சாப்பிடும் யோகர்ட், காலையில் உணவாக சேர்க்கப்படும் தானியங்கள், எனர்ஜி பானங்கள், ஐஸ் டீ, கிரானோலா பார்கள் மற்றும் சுவை மிக்க நட்ஸ் பால் போன்றவற்றில் சர்க்கரையை சேர்ப்பதை தவிருங்கள்.

 

பிரக்டோஸ், குளுக்கோஸ், மால்டோஸ், சுக்ரோஸ் அல்லது டெக்ஸ்ட்ரோஸ் போன்ற பெயர்களிலும் சர்க்கரை சேர்க்கப்படலாம். எனவே எந்தவொரு உணவுப் பொருட்களையும் சாப்பிடுவதற்கு முன்பு அதன் லேபிள் பட்டியலை படியுங்கள்.

​நல்ல கொழுப்பை அதிகரியுங்கள்

நட்ஸ் வகைகள், விதைகள், ஆலிவ் ஆயில் மற்றும் அவகேடோ போன்றவற்றில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. இது உங்கள் உடல் எடை மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இது வயிறு தொப்பை போடுவதை எதிர்த்து போராடுகிறது. ஆரோக்கியமான கொழுப்பு உணவுகளை பெண்கள் எடுத்துக்கொள்ளலாம்.

இடுப்பு, வயிறு செயல்பாடுகளை அதிகரிக்கவும்

பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு பெண்களின் இடுப்பளவு அதிகரிக்கிறது. எனவே இடுப்பை திருப்புவது, குனிவது போன்ற இடுப்பு சார்ந்த உடற்பயிற்சியில் அவர்கள் ஈடுபடலாம்.அவ்வபோது குனிந்து வேலை செய்வதை அதிகரிக்கலாம். பெண்கள் தங்கள் தொப்பையை குறைக்க இடுப்பு சார்ந்த உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருவது நன்மை அளிக்கும். இடுப்பு செயல்பாட்டை வேகமாக அதிகரிக்க நினைத்தால் குத்துச்சண்டை பயிற்சி செய்யலாம்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles