செய்திகள்தமிழகம்

இங்கிலாந்தில் வேகமாக பரவும் உருமாறிய கொரோனா தொற்று.. மீண்டும் பொதுமுடக்கத்தை

இங்கிலாந்தில் வேகமாக பரவும் உருமாறிய கொரோனா தொற்று.. மீண்டும் பொதுமுடக்கத்தை அறிவித்தார் போரிஸ் ஜான்சன்..

                                                                            இங்கிலாந்தில் மீண்டும் “லாக்டவுன்”
மாறிய கொரோனா வைரஸ், இங்கிலாந்தில் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, அங்கு பாதிப்பு முன்பை விட அதிகரித்து வருகிறது. ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி ஒருபுறம் போடப்பட்டு வந்தாலும், இதுவரை இல்லாத புதிய உச்சமாக கடந்த 24 மணிநேரத்தில், 58,784 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். இதனால் ஐரோப்பாவிலேயே அதிகம் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் நாடாக, இங்கிலாந்து உருவெடுத்துள்ளது.

இந்நிலையில், தொலைக்காட்சியில் பேசிய அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன், புதிய ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். அதன்படி, பள்ளி,கல்லூரிகள்,கடைகள் மூடப்படும் என்று கூறிய பிரதமர் போரிஸ், பல்கலைக்கழக மாணவர்கள், பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரம் வரை திரும்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

இந்த புதிய உத்தரவுகள் சட்டமாக இயற்றப்பட்டு, புதன்கிழமை முதல் அமல்படுத்தப்படும் என்றும், பிப்ரவரி மாதம் 2 வது வாரம் வரை பொதுமுடக்கம் நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் பிரதமர் ஜான்சன் குறிப்பிட்டார். கொரோனா முதல் அலையை விட, 40 சதவீதம் வேகமாக தற்போது இங்கிலாந்தில் வைரஸ் தொற்று பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles