அரசியல்செய்திகள்

ஜி.கே.வாசன் பிறந்தநாள் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்!!

 

ஜி.கே.வாசன்

காஞ்சிபுரம்: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பிறந்தநாளையொட்டி, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. காஞ்சி தெற்கு மாவட்ட தமாகா சார்பில், கட்சி தலைவர் ஜி.கே.வாசன் பிறந்த தினத்தையொட்டி காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை, சின்ன ஐயங்குளம் ஆகிய பகுதிகளில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தலைவர் மலையூர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்திக் வரவேற்றார். சின்ன ஐயங்குளம் பஸ் நிறுத்தம் பகுதியில் தமாகா கொடியேற்றி ஏழைகளுக்கு அன்னதானம், வேட்டி, சேலை, இஸ்திரிபெட்டி ஆகியவை வழங்கப்பட்டன. இதில், நிர்வாகிகள் கோல்டு மோகன், கஜேந்திரன், ரிஸ்க் பாஸ்கர், தீபக், விக்னேஷ்வரன், சங்கர், சுகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Show More

Leave a Reply

Related Articles