உலகம்செய்திகள்

‘ஓநாய்’ முகமூடி அணிந்துகொண்டு புத்தாண்டு கொண்டாடிய நபர்: கைது செய்த போலீஸ்!

பாகிஸ்தானில் ஓநாய் போன்ற முகமூடி அணிந்த நபரை, பெஷாவர் காவல்துறை கைது செய்துள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

Pakistani-man-gets-arrested-for-wearing-a--wolf--mask--netizens-criticize

 

முகக்கவசங்கள் என்பது தற்போது நம் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டன என்றுதான் சொல்லவேண்டும். கொடிய கொரோனா வைரஸிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள முகக்கவசங்கள் அவசியமானது என்றாலும், தற்போது விதவிதமான மாஸ்க்-கள் வைரலாகி வருகிறது. இங்கிலாந்தில் ஒரு நபர் தனது முகக்கவசத்தைச் சுற்றி ஒரு பாம்பை அணிந்திருந்தார், அது இறுதியில் அவரது வாயை  மூடியது, இது மிகவும் வைரலானது. இதைப்போலவே மற்றொரு வேடிக்கையான முகக்கவசம் தற்போது வைரலாகியுள்ளது.

 

பாகிஸ்தானின் கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் அமைந்துள்ள பெஷாவரில் புத்தாண்டு தினத்தன்று ஒரு மனிதர்  ‘ஓநாய்’ போன்ற முகமூடி அணிந்திருந்தார், பொதுமக்களை பயமுறுத்தும் விதத்தில் அவர் முகமூடி அணிந்திருந்ததால் உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். இவரது இந்த ஓநாய் முகமூடியை கிண்டலடித்து நகைச்சுவையாகவும், வேடிக்கையாகவும் பல நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Show More

Leave a Reply

Related Articles