சினிமா செய்திகள்

வெகு நாட்களுக்கு பிறகு அப்டேட் குடுத்த போனி கபூர் : கொண்டாட்டத்தில் ரசிகர்கள் !!

’வலிமை’ படத்தில் அஜித்துக்கு அம்மாவாக மூத்த நடிகை சுமித்ரா நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
valimai-updateமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடித்த  ’நேர்கொண்ட பார்வை’ கடந்த ஆண்டு வெளியாகி பாராட்டுகளைக் குவித்தது. இப்படத்தினை ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய வெற்றி இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி இருந்தார். ‘நேர்கொண்ட பார்வை’-யின் வெற்றியால், இக்கூட்டணி மீண்டும் ’வலிமை’ படத்தில் இணைந்தது. ‘ஈஸ்வர மூர்த்தி’ என்ற பெயரில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.

தற்போது, ஹைதராபாத்தில் மீண்டும் படப்பிடிப்பில் இணைந்துள்ள அஜித் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். ஜனவரிக்குள் படத்தை முடித்து அஜித்தின் 50 வது பிறந்தநாளான மே 1 ஆம் தேதி தியேட்டர்களில் கொண்டுவர கடுமையாக படக்குழு உழைத்து வருகிறது.

image

கடந்த 2006 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ’வரலாறு’ அஜித் படங்களின் வரலாற்றில் குறிப்பிட்ட இடத்தைப் பிடித்தப்படம். மூன்று முகமாக அஜித் மூன்று கேரக்டர்களில் நடித்த, இப்படம் பெரிய வெற்றி பெற்றதோடு வசூலையும் குவித்தது.  அஜித்துக்கு அம்மாவாக சுஜாதா, கனிகா நடித்து உருக வைத்தார்கள். அந்தப் படத்திற்குப் பிறகு ‘வலிமை’ படத்திலும் உருக வைக்கும் அம்மா சென்டிமெண்ட் காட்சிகள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதற்காகவே, படத்தின் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தனி பாடலை உருவாக்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

image

 

நடிகை சுமித்ரா, சிவாஜி, சிவக்குமார், கமல்ஹாசன், ரஜினி என பலருடன் முன்னணி நடிகையாக நடித்துள்ளார். 90-களுக்குப் பிறகு தொடர்ச்சியாக அம்மா வேடங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Leave a Reply

Related Articles