குற்றம்

10 கோடிக்கும் அதிகமான கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களின் முக்கிய தகவல்கள், ஹேக்கர்களின் டார்க் வெப் பக்கத்தில் கசிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்பு மென்பொருள் மூலம் மட்டுமே அணுகக் கூடியமான இணையதளமான டார்க் வெப்பில், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களின் முழு பெயர்கள், செல்போன் எண்கள், மின்னஞ்சல் முகவரி மற்றும் அவர்களது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் விபரங்கள் கசிந்துள்ளன.

 

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு

அமேசான், ஸ்விக்கி உள்ளிட்ட வணிகர்களுக்கான பரிவர்த்தனைகளைச் செயலாக்கும் ஜஸ்பேவுடன், ((Juspay)) டார்க் வெப் தொடர்பில் இருப்பது தெரியவந்துள்ளது. டார்க் வெப்பில் வெளியாகியுள்ள தரவுகள் பெரும்பாலும் 2017 மார்ச் முதல் 2020 ஆகஸ்ட் வரை நடந்த ஆன்லைன் பரிவர்த்தனைகள் என தெரியவந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள, ஜஸ்பே நிறுவனத் தலைவர் விமல் குமார், 10 கோடி பதிவுகளில் ஒரு சிறிய பகுதி மட்டுமே கசிந்துள்ளதாக கூறியுள்ளார். முழுமையான கிரெடிட், டெபிட் கார்டு அட்டை விபரங்கள் வேறு சர்வரில் பாதுகாப்புடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles