கள்ளக்குறிச்சியில் வைகாசி 12 (25-5-2024) சனிக்கிழமை, ALC சமுதாயக்கூடத்தில் (அரசு மருத்துவமனை எதிரில்), கச்சிராபாளையம் சாலை, இரண்டாம் ஆண்டு கல்லை உணவுத் திருவிழா நடைபெற உள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த திருவிழா, பாரம்பரிய உணவு, இயற்கை விவசாயம் மற்றும் தமிழர் கலைகளை கொண்டாடும் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
உணவும், கலாச்சாரமும், விவசாயமும் கைகோர்த்து வரும் இரண்டாம் ஆண்டு கல்லை உணவுத் திருவிழா!
இயற்கை விளைபொருட்கள், மரபு விதைகள், தற்சார்பு பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அமைக்கப்படும்.
பின்வரும் மரபு உணவுகள் :
- கருப்புக்கவுணி – பாயாசம்
- சீரகசம்பா – பலா பிரியாணி
- சிவன்சம்பா – மல்லி சோறு
- தூயமல்லி – மாங்காய் சோறு
- வரகரிசி – சாம்பார் சோறு
- பொன்னி – தயிர் சோறு
- மாங்காய் கீறல் – ஊறுகாய்
- பல காய்கறி – கூட்டு
- முளைகட்டிய தானியங்கள்
- அரிசி வற்றல்
இயற்கை விளைபொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள்:
- இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட அரிசி,
- எண்ணெய் வகைகள்,
- சிறுதானியங்கள்,
- மா, வாழை, மஞ்சள், கிழங்குகள்,
- தின்பண்டங்கள்,
- விதைகள்,
- சத்துமாவு,
- தேன்,
- ஊறுகாய்,
- மரப்பாச்சி பொம்மைகள்
- புத்தகங்கள்
- பொடி வகைகள்,
- கைத்தறி ஆடைகள்,
- கைவினைப்பொருட்கள்,
- வடகம்,
- துணிப்பை போன்ற பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு கிடைக்கும்.
முன்னோடி இயற்கை விவசாயிகளின் அனுபவ வழிகாட்டல் கருத்துரைகள்:
திரு. ஞானபிரகாசம் (Entomologist), திரு. நீ.செல்வம் (Deputy Director of Agriculture (Micro Irrigation), Cuddalore) மற்றும் உழுது உண் சுந்தர் (Tamil Nadu Seed Collectors Association) போன்ற அனுபவம் வாய்ந்த இயற்கை விவசாயிகள் இயற்கை விவசாயம் குறித்த தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள்.
தமிழர் கலை நிகழ்ச்சிகள்: சிலம்பம், பறையிசை, கோலாட்டம் மற்றும் ஒயிலாட்டம் போன்ற தமிழர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இந்த திருவிழா குடும்பத்தினருடன் ஒரு நாள் செலவிட சிறந்த வாய்ப்பாகும். பாரம்பரிய உணவுகளை சுவைத்து, இயற்கை விவசாயம் பற்றி அறிந்து கொண்டு, தமிழர் கலைகளை ரசித்து மகிழுங்கள்!