நமது மாவட்டம்சங்கராபுரம்

வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள்அச்சமடைந்துள்ளனர்!!!

சங்கராபுரம் நகரில் மேட்டுத் தெரு, பூட்டை ரோடு, பொய்குனம் ரோடு, பதிவாளர் அலுவலகம் சந்து, காலனி என நகரில் அனைத்து பகுதிகள் மற்றும் காட்டு வனஞ்சூர் பகுதிகளில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.காட்டு வனஞ்சூர் கிராமத்தில் தொற்றால் பாதிக்கப்பட்ட 54 வயது பள்ளி ஆசிரியை நேற்று முன்தினம் இரவு சிகிச்சைபலனின்றி இறந்தார்.மேலும், இதே பகுதியில், 3 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்தியன் வங்கி சந்தில் 64 வயது ஆண், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் 40 வயது ஆண், புற்று மாரியம்மன் கோவில் அருகே 55 வயது ஆண் ஆகியோர் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சங்கராபுரம் மற்றும் காட்டு வனஞ்சூர் கிராமத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்றால் பொது மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles