இந்தியாசெய்திகள்

வீரமரணம் அடைந்த பழனியின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

லடாக் பகுதியில் சீன ராணுவ தாக்குதலில் ராமநாதபுரத்தை சேர்ந்த பழனி உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம்  அடைந்தனர்.

இந்தநிலையில் ராமநாதபுரத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனியின் உடல் நேற்று டெல்லியில் இருந்து விமான படையின் சிறப்பு விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து பழனியின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்களும் நேற்று மாலை ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு வந்திருந்தனர். நள்ளிரவு 11.30 மணி அளவில் பழனியின் உடலானது விமானம் மூலம் மதுரை வந்தடைந்தது.

மதுரை விமான நிலையத்தில் பழனியின் உடலுக்கு முப்படை சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் மதுரை மாவட்ட கலெக்டர் வினய், போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், தென்மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன், டி.ஐ.ஜி. ஆனி விஜயா, போலீஸ்சூப்பிரண்டு மணிவண்ணன், விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன், மதுரை எம்.பி. வெங்கடேசன், டாக்டர் சரவணன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் அவரது உடல் மதுரை விமான நிலைய ஆம்புலன்ஸ் மூலம் பழனியின் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று காலை பழனியின் உடலுக்கு குடும்பத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் இறுதி சடங்கு நடைபெற்றது.

அதன் பின்னர் வீட்டிற்கே அருகே உள்ள சொந்த நிலத்தில் பழனியின் உடலுக்கு முப்படை வீரர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

Army Man Dead News 18.06.2020
Army Man Dead News 18.06.2020
Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles