திருக்கோவிலூர்நமது மாவட்டம்

வீட்டின் பூட்டை திறந்து நகையை திருடிய மர்ம நபர்கள்

திருக்கோவிலுார் அடுத்த வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி, 40; கூலித் தொழிலாளி. நேற்று முன்தினம் மனைவியுடன் வேலைக்குச் சென்றிருந்தார். வீட்டிலிருந்த அவரது மகன் வீட்டைப் பூட்டி சாவியை வீட்டின் வாசல் அருகே மறைத்து வைத்துவிட்டு உடல்நிலை பாதித்திருந்த தனது பாட்டியை அழைத்துக் கொண்டு திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு திறக்கப்பட்டு, பீரோவில் இருந்த 5 சவரன் நகை திருடு போயிருப்பது தெரியவந்தது.ராமமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Theft News 24.06.2020
Theft News 24.06.2020
Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles