நமது மாவட்டம்உளுந்தூர்பேட்டை

விவசாயி மின்சாரம் தாக்கி பலி !!!

உளுந்துார்பேட்டை அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் தாக்கி இறந்தார்.

உளுந்துார்பேட்டை அடுத்த சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் நாவப்பன், 55; விவசாயி. இவர், நேற்று முன்தினம் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். சீனிவாசன் என்பவரின் நிலத்தின் வழியாகச் சென்றபோது, அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles