செய்திகள்தொழில்நுட்பம்

விற்பனையில் 54 சதவீதம் அதிரடி வளர்ச்சி பெற்ற டாடா மோட்டார்ஸ்

விற்பனையில் அதிரடி வளர்ச்சி பெற்ற டாடா மோட்டார்ஸ்

                                                         டாடா கார்
டாடா மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவனம் பிப்ரவரி 2021 மாதம் 58,473 யூனிட்களை விற்பனைசெய்து இருக்கிறது. இது 2020 பிப்வரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது 54 சதவீதம் அதிகம் ஆகும். ஒட்டுமொத்த விற்பனையில் வணிக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்கள் என பிரிக்கப்பட்டு உள்ளது.
 டாடா கார்
பயணிகள் வாகனங்களை பொருத்தவரை கடந்த மாதம் மட்டும் 27,225 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது 119 சதவீதம் அதிகம் ஆகும். மேலும் கடந்த ஒன்பது ஆண்டுகளின் பிப்ரவரி மாத விற்பனையை விட 2021 பிப்ரவரி மாதம் அதிக யூனிட்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்து இருக்கிறது.
வணிக வாகனங்கள் பிரிவில் ஏற்றுமதியை சேர்த்து மொத்தம் 33,966 யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. இது 2020 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது 21 சதவீதம் அதிகம் ஆகும்.
Show More

Leave a Reply

Related Articles