விளையாட்டுசெய்திகள்

விதிகளை பின்பற்றாவிடில் விளையாட வராதீர்கள் : ஆஸ்திரேலியாவின் சுகாதரத்துறை அமைச்சர்…

இந்திய கிரிக்கெட் வீரர்களால் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்ற முடியவில்லை என்றால் விளையாட வர வேண்டாம் என ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாண்ட் மாகாணத்தின் சுகாதரத்துறை அமைச்சர் கடுமையாக சாடியுள்ளார். அவருடைய கருத்துக்கு எதிராக பலரும் கண்டனத்தை பதிவிட்டுள்ளனர். 

If-the-Indians-don---t-want-to-play-by-the-rules-don---t-come-says-Queensland-Shadow-Health-Minister

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நான்கு போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. மூன்றாவது போட்டி வரும் 7 ஆம் தேதி சிட்னியில் நடைபெறுகிறது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு இந்தியாவின் துணைக்கேப்டன் ரோகித் சர்மா, பிரித்வி ஷா, சைனி, சுப்மன் கில் மற்றும் ரிஷப் பந்து ஆகிய 5 வீரர்கள், கொரோனா விதிகளை மீறி வெளியாட்களுடன் தொடர்பு கொண்டதாக சர்ச்சை வெடித்தது.

image

வீரர்களுடன் நேரடி தொடர்பு கொண்டிருந்த வீடியோ ரசிகர் ஒருவர் ட்விட்டரில் பகிர்ந்திருந்தது பூதாகாரமாக வெடித்தது. அதுமட்டுமின்றி தாயகம் திரும்பிவிட்ட விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்ட்யாவும் ஆஸ்திரேலியாவில் இருந்த போது முகக்கவசம் அணியாமல் குழந்தைகளுக்கான பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் இருந்த புகைப்படமும் சர்ச்சையில் சிக்கியது.

இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் வீரர்களிடம் விளக்கம் கேட்டு விசாரணை மேற்கொண்டுள்ளன. இதற்கிடையே சிட்னி போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனையில் யாருக்கு தொற்று கண்டறியப்படவில்லை.

image

 

இந்திய வீரர்கள் விதிமுறைகளை மீறியது தொடர்பாக முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் உள்ளிட்டோரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள குயிண்ட்ஸ்லேண்ட் மாகாணத்தின் சுகாதரத்துறை அமைச்சர் ரோஸ் பேட்ஸ் கடுமையாக எச்சரித்துள்ளார். கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க முடியாது எனில், இந்திய வீரர்கள் விளையாட வர வேண்டாம் என கூறியுள்ளார். அவருடைய கருத்துக்கு எதிராக பலரும் கண்டனத்தை பதிவிட்டுள்ளனர். ஆஸி அமைச்சரின் கருத்தால் பிசிசிஐ அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

“நாங்கள் என்ன மிருகக்காட்சிசாலையில் அடைக்கப்பட்டுள்ள விலங்குகளா?” – இந்திய கிரிக்கெட் அணி

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles