இந்தியாசெய்திகள்

விடிய விடிய நடந்த துப்பாக்கி சண்டை- 3 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றது ராணுவம்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத்தை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையில் ராணுவம் மற்றும் போலீசார் இணைந்த கூட்டுப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேடுதல் வேட்டையின்போது, பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் சேவா உலார் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று இரவு அப்பகுதியை போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். விடிய விடிய நீடித்த இந்த துப்பாக்கி சண்டை இன்றும் நீடித்தது. இன்று காலையில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். பின்னர் பிற்பகல் 2 பேரை சுட்டுக் கொன்றனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.
என்கவுண்டர் நடந்த பகுதியில் இருந்து துப்பாக்கி சத்தத்துடன், புகை வெளியானது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது.

Army News 26.06.2020
Army News 26.06.2020
Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles