நமது மாவட்டம்உளுந்தூர்பேட்டை

வாலிபர் வெட்டிக்கொலை-போலீசார் விசாரணை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பெரியபட்டு ஏரியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அவரது கழுத்து மற்றும் உடலில் அரிவாளால் வெட்டப்பட்ட காயங்கள் இருந்தன.

எனவே அவரை மர்மநபர்கள், வெட்டிக் கொலை செய்திருப்பது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்த விவரம் தெரியவில்லை. இதையடுத்து வாலிபரின் உடல், பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles