ஆன்மீகம்

வாமனர் வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் அருள் !

திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் திருவோணத்தையொட்டி வாமனர் வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.திருவோணத்தையொட்டி, நேற்று முன்தினம் காலை 10:30 மணிக்கு மகா வாமனருக்கு திருமஞ்சனம், மாலை 5:00 மணிக்கு வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில் தீபம் ஏற்றப்பட்டு லட்சார்ச்சனை நடந்தது.ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகத்தினர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். தனிமனித இடைவெளியுடன் விழா நடந்தது.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles