தொழில்நுட்பம்

வாட்ஸ்அப் பீட்டாவில் உருவாகும் இரண்டு அசத்தல் அம்சங்கள்

வாட்ஸ்அப் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பீட்டா வெர்ஷன்களில் ஷேர்சாட் வீடியோக்களை பார்க்கும் வசதியை வழங்குகிறது. வாட்ஸ்அப் ஐஒஎஸ் பீட்டா 2.20.81.3 மற்றும் ஆண்ட்ராய்டு பீட்டா 2.20.197.7 வெர்ஷன்களில் ஷேர்சாட் வீடியோக்களை ஃபுளோட்டிங் வீடியோவாக பார்க்க முடிகிறது.
முன்னதாக இதே வசதி யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் வீடியோக்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. தற்சமயம் புதிய ஷேர்சாட் வீடியோ வசதி மட்டுமின்றி சாட்களில் வால்பேப்பர்களை கஸ்டமைஸ் செய்யும் வசதியும் சோதனை செய்யப்படுகிறது. இதை கொண்டு ஒவ்வொரு சாட்களிலும் வெவ்வேறு வால்பேப்பர்களை செட் செய்து கொள்ள முடியும்.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களின் புதிய வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன்களில் இந்த அம்சங்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் செயலியில் ஷேர்சாட் வீடியோ பகிரப்பட்டால், அதனை பார்க்க கோரும் பிளே பட்டன் இடம்பெறுகிறது. அதனை க்ளிக் செய்ததும் வீடியோ பிக்சர் இன் பிக்சர் மோட் வடிவில் பிளே ஆகும்.
வாட்ஸ்அப் செயலியில் வால்பேப்பர்களை கஸ்டமைஸ் செய்யும் வசதி முழுமையாக உருவாக்கப்படவில்லை என தெரிகிறது. அந்த வகையில் இந்த அம்சம் எதிர்கால அப்டேட்களில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles