சினிமா செய்திகள்

வர்மா இயக்கத்தில் ஹீரோவாக பனங்காட்டுப்படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் …

 

உடம்பில் கிலோ கணக்கில் நகைகள் அணிந்து வரும் பனங்காட்டுப்படை கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஹரி நாடாரை தமிழகத்தில் தெரியாத ஆட்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு பேமஸான அவர் நாங்குநேரி இடைத்தேர்தலில் பனங்காட்டுப்படை கட்சி சார்பில் போட்டியிட்டார்.

தற்போது இவர் சினிமா துறையிலும் கால் பதிக்கிறார். அதுவும் ஹீரோ மற்றும் தயாரிப்பாளராக என ஆரம்பமே அவர் அனைவரையும் வியக்க வைத்துள்ளார். ‘அண்ணாச்சி சினி மார்க்’ என்ற பெயரிலான இவரது தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தின் பூஜை இன்று ஏ.வி.எம் ஸ்டூடியோவில் அமர்களமாக நடைபெற்றது.

இப்படத்தை முத்தமிழ் வர்மா என்பவர் எழுதி இயக்குகிறார். படத்தின் டைட்டில் லுக் மோஷன் போஸ்டரும் இன்று  வெளியிடப்பட்டது. இந்த படத்திற்கு 2கே அழகானது காதல் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் நடிகை வனிதா விஜயகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Leave a Reply

Related Articles