சினிமா செய்திகள்

கிராமிய கலைஞர்களுக்கு உதவும் விதமாக ‘விர்ச்சுவல்’ தமிழ் மாரத்தான் 2021!

Virtual-Tamil-Marathon-going-to-be-organized-for-a-fundraising-cause-for-the-rural-development-of-the-state-Tamil-Nadu

மனித நாகரீகம் மெல்ல மெல்ல வளர்ந்து வந்த பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கிரேக்க நாட்டை சேர்ந்த போர் வீரன் பெய்டிபைட்ஸ் மாரத்தான் நகரில் நடைபெற்ற போரில் கிரேக்க நாடு வெற்றி பெற்ற தகவலை தன் நாட்டு மக்களிடம் தெரிவிக்க மாரத்தான் நகரிலிருந்து பல கிலோ மீட்டர் தூரமுள்ள ஏதென்ஸ் நகருக்கு ஓட்டமெடுத்து சென்றது தான் உலகின் முதல் மாரத்தான் ஓட்டம்.

அதன் பிறகு மாரத்தான் ஓட்டத்தின் விதிமுறைகளில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்ட போதும் ‘மாரத்தான்’ ஓட்டத்தை நடத்துவதற்கான காரணம் மட்டும் மாறவேயில்லை. சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த, விழிப்புணர்வு கொடுக்க என ஏதோ ஒரு காரணத்தை மையமாக வைத்து தான் உலக நாடுகளில் இன்றும் மாரத்தான் ஓட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தமிழ் மரபையும், தமிழர் பாரம்பரியத்தையும் காக்கும் நோக்கில் ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் ‘விர்ச்சுவல்’ தமிழ் மாரத்தான் ஜனவரி 10-24 வரை நடைபெறவுள்ளது.

தமிழ் மாரத்தானை நடத்தும் அமைப்பின் தலைவர் ஹேமந்த் தெரிவித்தது “தமிழ் கலைகள் மற்றும் கலாச்சாரங்கள் குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்துவது ஒவ்வொரு தலைமுறையின் கடமை. அது போல தமிழக கிராமங்கள் தன்னிறைவு பெற வேண்டும். இந்த நோக்கங்களுக்காக தமிழ் மாரத்தான் 2021 நடைபெறுகிறது.

 

வாழ்வாதாரத்தை இழந்து வரும் தமிழ் கிராமிய கலைஞர்களுக்கு உதவும் விதமாக ஒரு இணைய மேடையை அமைத்து அதில் தொடர்ந்து மயிலாட்டம், கரகாட்டம், காவடி ஆட்டம், கும்மி, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு, கோலாட்டம், ஒயிலாட்டம் தெருக்கூத்து ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளோம். அது போல, குறைந்தபட்சம்  50 தமிழக கிராமங்களின் மருத்துவமனை மற்றும் கல்விக்கூடங்களில் மேம்பாட்டிற்கு உதவவும் திட்டமிட்டுள்ளோம்” என்கிறார்.

நிதி திரட்டும் முயற்சியாக இந்த ‘விர்ச்சுவல்’ தமிழ் மாரத்தான் நடைபெறவுள்ளது. நேரடியாக இல்லாமல் அவரவர் இருக்கும் இடங்களில் இருந்தே மொபைல் ஆப் உதவியுடன் இந்த மாரத்தான் ஓட்டத்தில் பங்கு பெறலாம்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles