நமது மாவட்டம்ரிஷிவிந்தியம்

ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 366 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், அரசு டாக்டர் ஒருவரும் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும் பலரது உமிழ்நீர் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதில் சிலரது பரிசோதனை முடிவு நேற்று வெளிவந்தது. கள்ளக்குறிச்சி நகரத்தை சேர்ந்த 11 பேர் உள்பட 21 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 387 ஆக உயர்ந்துள்ளது.
இந்த வைரஸ் தொற்று நோய்க்கு தி.மு.க. எம்.எல்.ஏ.

Dmk Mla Vasantham Karthikeyan Coronavirus Infection 22.06.2020
Dmk Mla Vasantham Karthikeyan Coronavirus Infection 22.06.2020

னும் பாதிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன்(வயது 48). தியாகதுருகம் ஒன்றிய தி.மு.க. செயலாளராகவும் உள்ளார். இவர் தனது தொகுதி முழுவதும் சென்று கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

சமீபத்தில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தனது குடும்பத்துடன் சென்றிருந்தார். அதன்பிறகு வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.வின் மனைவி இளமதி(39), மகள் மகன்யா(8) ஆகியோருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. கொரோனாவுக்கான அறிகுறி இருந்ததால் இருவரது உமிழ்நீரும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து கடந்த 11-ந் தேதி இருவரும் பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களை கண்காணிக்க வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மற்றும் அவரது தாயாரும், தியாகதுருகம் முன்னாள் ஒன்றியக்குழு தலைவருமான காந்திமதி கண்ணனும் மருத்துவமனையிலேயே தங்கினர்.
இந்த நிலையில் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.வுக்கும், அவரது தாயாருக்கும் நேற்று முன்தினம் திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. சளி மற்றும் இருமல் இருந்ததால் உடனடியாக இருவருக்கும் உமிழ்நீர் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவு நேற்று வந்தது. இதில் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.
இதனை தொடர்ந்து இருவரும் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கி உள்ளதால், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்-யார்? என்ற விவரங்களை சுகாதாரத்துறையினர் சேகரித்து, அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் சாத்தனூரில் உள்ள வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.வின் வீடு மற்றும் அந்த தெரு முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles