நமது மாவட்டம்ரிஷிவிந்தியம்

ரிஷிவந்தியம் அருகே 400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு. ஒருவர் கைது.!!

தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து தமிழக அரசு தொடர்ந்து ஊரடங்கு பிறப்பித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் கள்ளக்குறிச்சி  மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள பாசார் கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக ரிஷிவந்தியம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது, இதனைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் அன்பழகன் தலைமையிலான போலீசார் பாசார் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாசார் கிராமம் மேற்கு தெருவை சேர்ந்த கணேசன் மகன் ஐயப்பன் தனது விவசாய நிலத்தில் 400 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சாராய ஊறல்களை கொட்டி அழித்த போலீசார் ஐயப்பனைக் கைதுசெய்து மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளதால் கள்ளக்குறிச்சி மாவட்ட கிராமப் பகுதிகளில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Show More

Leave a Reply

Related Articles