உளுந்தூர்பேட்டைநமது மாவட்டம்

மேடை அலங்கார கடையில் தீ விபத்து !

20200625 095950
20200625 095950

உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டையில்ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான பந்தல் மேடை அலங்காரம் அமைக்கும் கடையில், திடீரென மின்கசிவு ஏற்பட்டு கடை தீப்பிடித்து எரிய தொடங்கின. கடை எரிவதைக் கண்டு அங்கிருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். தீ மளமளவென பரவியதால் தீயை அணைக்க முடியாமல் உளுந்தூர்பேட்டை தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு குழுவினர் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீவிபத்தில் 10 லட்சம் மதிப்பிலான பந்தல் அமைக்கும் மரம், கீற்று மற்றும் அலங்கார பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது..

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles