குற்றம்திருக்கோவிலூர்

மூதாட்டியிடம் மூன்று பவுன் செயினை பறித்த மூவர் கைது!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே உள்ள கிராமம் வீரப்பாண்டி. இந்த கிராமத்தில் உள்ள நாவிதர் தெருவில் வசிப்பவர் சிவகாமி எனும் மூதாட்டி. இந்த நிலையில் இன்று மாலை தமது வீட்டின் முன் கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை அதே பகுதியை சே

Crime 18.06.2020
Crime 18.06.2020

ர்ந்த பிரதீப்ராஜ் எனும் இளைஞர் நெடுநேரமாக நோட்டமிட்டுள்ளார். பின்னர் தெருவில் ஆல் நடமாட்டம் இல்லாத நேரத்தில் உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டியின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை திருடிக்கொண்டு தப்ப முயற்சி செய்து உள்ளான். இதனை அறிந்த மூதாட்டி சத்தமிட அருகில் இருந்தவர்கள் திருடனை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அதற்குள் தப்பிவிட அரகண்டநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு வந்த போலிசார் திருடனை தேடி உள்ளனர். அப்போது அப்பகுதியில் பூட்டி இருந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட பரதீப்ராஜ் மற்றும் அவனது கூட்டாளிகள் பார்த்திபன் மற்றும் ரஞ்சித் ஆகியோரை கைது செய்தனர். திருடப்பட்ட 5 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்த அரகண்டநல்லூர் காவல் துறையினரை அப்பகுதி மக்கள் பாராட்டினார்கள்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles