நமது மாவட்டம்ரிஷிவிந்தியம்

மின்சார கம்பி உறசியதால் 10 ஏக்கர் கரும்பு தீயில் கருகி நாசம் !

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவிந்தியம் அருகே உள்ள கங்கியனூர் கிராமத்தில் உள்ள சுப்ரமணியன் ,ஆனந்தன் ,அய்யப்பன் மற்றும் ராமன் ஆகியோரின் கரும்பு காடு திடிரென தீப்பிடித்து எறிந்தது.

இவர்களின் வயலில் மின்சார கம்பிகள் கீழே தொங்குவதால் கரும்பு கீத்துகளின் மேல் உரசி திடிரென தீப்பிடித்து எறிய தொடங்கியது .இதனால் 4 பேரின் 10 ஏக்கர் அளவிலான கரும்பு காடு மூற்றிலும் தீப்பிடித்து எறிந்து சேதம் அடைந்தது.இது குறித்து தகவல் அறிந்து வந்த திருக்கோவிலூர் தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்..இதனால் 10 ஆண்டுகளாக பயிரிடபட்ட கரும்பு ஆலைக்கு எடுத்து செல்ல முடியாமல் இருப்பதாக விவசாயீகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Fire News 15.05.2020
Fire News 15.05.2020
Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles