மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் – வேலை வாய்ப்பு விவரங்கள்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் – வேலை வாய்ப்பு
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் – வேலை வாய்ப்பு
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் – வேலை வாய்ப்பு விவரங்கள்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் – வேலை வாய்ப்பு விவரங்கள்

2015 ஆண்டின்‌ இளைஞர்‌ நீதி (குழந்தைகள்‌ பராமரிப்பு மற்றும்‌ பாதுகாப்பு) சட்டம்‌ மற்றும்‌ விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞர்‌ நீதிக்குழுமு உறுப்பினர்கள்‌ ஒரு பெண்‌ மற்றும்‌ ஒரு ஆண்‌ என்ற விகிதத்தில்‌ கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைக்‌ கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருநீது விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

குழந்தைகள்‌ தொடர்பான உடல்‌ நலம்‌, கல்வி, குழந்தைகளுக்கான நலப்பணிகளில்‌ குறைந்தது 7 ஆண்டுகள்‌ முனைப்புடன்‌ ஈடுபாடு கொண்டவர்‌ அல்லது குழந்தை உளவியல்‌ அல்லது மனநலம்‌ …மருத்துவம்‌’ அல்லது சட்டம்‌ அல்லது சமூகப்பணி அல்லது சமூகவியல்‌ அல்லது மனித மேம்பாடு ஆகியவற்றில்‌ ஏதேனும்‌ பட்டம்‌ பெற்ற தொழில்‌ புரிபவராக இருத்தல்‌ வேண்டும்‌.

மேலும்‌ விண்ணப்பதாரர்கள்‌ நியமனம்‌ செய்யப்படும்போது 35 வயதுக்கு குறையாதவராகவும்‌, 65 வயதை பூர்த்தி செய்யாதவராகவும்‌’ இருத்தல்‌ வேண்டும்‌. ஒரு குழுவில்‌ அதிகபட்சமாக ஒரு நபர்‌ இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவர்களாவர்‌, ஆனால்‌ தொடர்ந்து இருமுறை பதவி. வகிக்க இயலாது.

இதற்கான விண்ணப்பப்படிவத்தை விழுப்புரம்‌ மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்‌, தகுதி வாய்ந்த நபர்கள்‌ மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில்‌ (செய்தி வெளியீடு நாளிலிருந்து 15 நாட்கள்‌ வரை) கீழ்கண்ட முகவரியில்‌ கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம்‌.

மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலகு,

எண்‌: 156, சாரதாம்பாள்‌ வீதி,

நித்தியானந்தம்‌ நகர்‌,

வழுதரெட்டி,

விழுப்புரம்‌ – 605 401.

தொலைபேசி எண்‌: 04146 – 290659

dcpuvpm1@gmail.com

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்‌ குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள்‌ மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும்‌, தகுதி மற்றும்‌ அனுபவத்தின்‌ அடிப்படையில்‌ நியமனம்‌ அமையும்‌ இது குறித்து அரசு முடிவே இறுதியானது என தெரிவிக்கப்படூகின்றது.

மாவட்ட ஆட்சியர்‌,
கள்ளக்குறிச்சி மாவட்டம்‌.