நமது மாவட்டம்கள்ளக்குறிச்சி

மாவட்டத்தில் மேலும் 340 பேருக்கு கொரோனா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 340 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 19,833 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், 1,000க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ததில் 340 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தின் தொற்று பாதிப்பு 20,173 ஆக உயர்ந்தது. இதில், 15,974 பேர் குணமடைந்துள்ளனர். 129 பேர் இறந்தனர். மீதமுள்ள 4,070 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Show More

Leave a Reply

Related Articles