சின்னசேலம்நமது ஆட்சியர்

மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணமாக மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டது.

தமிழக அரசின் உத்தரவின்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கையில், தேசிய அடையாள அட்டை வைத்திருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் கொரோனா நிவாரணத் தொகை மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.அதையொட்டி, மாவட்டத்தில் கடந்த ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை அடையாள அட்டை வைத்திருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தலா 1,000 ரூபாய் நிவாரணத் தொகை, அந்தந்த வி.ஏ.ஓ.,க்கள் மூலம் வழங்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக, சின்னசேலம் பி.டி.ஓ., அலுவலக வளாகங்களில் தாலுகாவில் உள்ள 84 மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், புளி உட்பட 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் நேற்று வழங்கப்பட்டது.மேலும் மாவட்டத்தில் அடையாள அட்டை வைத்திருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் நிவாரண மளிகைப் பொருட்கள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles