Kallakurichi District

மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் ஆய்வு செய்தார்

மாண்புமிகு பொதுப்பணித்துறை (கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்) திரு ஈ. வி. வேலு அவர்கள் 10-12-2021 அன்று கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலக கட்டிட கட்டுமான பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதியதாகக் கட்டப்பட்டு வரும்‌ கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கட்டிடத்தை மாண்புமிகு பொதுப்பணித்துறை (கட்டிடங்கள்‌), நெடுஞ்சாலைகள்‌ மற்றும்‌ சிறு துறைமுகங்கள்‌ துறை அமைச்சர்‌ திரு. எ. வ. வேலு அவர்கள்‌ ஆய்வு செய்தார்‌.

கள்ளக்குறிச்சி மாவட்டம்‌, வீரசோழபுரத்தில்‌ புதியதாகக் கட்டப்பட்டு வரும்‌ கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கட்டிடத்தை மாண்புமிகு பொதுப்பணித்துறை (கட்டிடங்கள்‌), நெடுஞ்சாலைகள்‌ மற்றும்‌ சிறு துறைமுகங்கள்‌ துறை அமைச்சர்‌ திரு. எ. வ. வேலு அவர்கள்‌, சங்கராபுரம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ திரு.தா.உதயசூரியன்‌, ரிஷிவந்தியம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ திரு. க. கார்த்திகேயன்‌, உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர்‌ திரு. ஏ. ஜே. மணிக்கண்ணன்‌ மற்றும்‌ மாவட்ட வருவாய்‌

அலுவலர்‌ திரு. சி. விஜய்பாபு ஆகியோர்‌ முன்னிலையில்‌ இன்று (10.12.2021) ஆய்வு செய்தார்‌. இவ்வாய்வின்போது மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர்‌ அவர்கள்‌ தெரிவித்ததாவது:

கள்ளக்குறிச்சி மாவட்டம்‌, விழுப்புரம்‌ மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, கையகப்படுத்தி செயல்பட்டு வருகிறது. இம்மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கட்டிடம்‌ அமைக்கப் பல்வேறு இடங்களில்‌ இடம்‌ தேர்வு செய்யப்பட்டு இறுதியாக வீரசோழபுரம்‌, அர்த்தநாரீஸ்வரர்‌ கோயிலுக்குச் சொந்தமான 19 ஹெக்டேர்‌ நிலம்‌ கையகப்படுத்தி இந்து சமய அறநிலையத்துறை அரசாணை பிறப்பித்தது. இவ்விடத்தில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கட்டிடம்‌ கட்டுவதற்கு பொதுப்பணித்துறையின்‌ மூலம்‌ ரூ.104.40 கோடி திட்ட மதிப்பீடு தயார்‌ செய்யப்பட்டு அனுமதி பெறப்பட்டது. பின்னர்‌ கட்டுமானப்‌ பணிகள்‌ தொடங்கப்பட்டது.

கட்டுமானப்‌ பணிகள்‌ தொடங்கி, ரூ.13.40 கோடி மதிப்பீட்டிற்கு அடித்தள கட்டுமானப்‌ பணிகள்‌ நடைபெற்றது. இந்நிலையில்‌ தனியர்‌ ஒருவர்‌ இந்நிலத்தில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கட்டிடம்‌ கட்ட கூடாதென வழக்கு தொடர்ந்தார்‌. இவ்வழக்கில்‌ வருவாய்‌ துறையின்‌ சார்பில்‌, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கட்டிடம்‌ கட்டுவதன்‌ முக்கியத்துவம்‌ குறித்தும்‌, இந்நிலத்தின்‌ தண்மை குறித்தும்‌, உயர்நீதிமன்றத்தில்‌ வாதாடப்பட்டு, ரூ.1,30,000 இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றத்தில்‌ தெரிவிக்கப்பட்டது. மேலும்‌, இரு நபர்‌ குழு கொண்டு இந்த இழப்பீடு தொகையை நிர்ணயம்‌ செய்ய அறிவுறுத்தப்பட்டதன்‌ அடிப்படையில்‌ ரூ.1,60,000 இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றத்தில்‌ நிர்ணயம்‌ செய்யப்பட்டது.

இவ்வழக்கு நிலுவையில்‌ உள்ள நிலையில்‌ தனியர்‌ உச்சநீதிமன்றத்தில்‌, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கட்டுமானப்பணிகளை நிறுத்தும்‌ பொருட்டு அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள்‌ அறநிலையத்துறைக்கே பயன்படுத்தப்பட வேண்டும்‌ எனக்‌ கூறி, தடை ஆணையைப் பெற்றுள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ கள்ளக்குறிச்சி மாவட்டத்தின்‌ வளர்ச்சி பணிகளைக் கண்காணிக்கும் பொருட்டு என்னை நியமனம்‌ செய்தார்‌. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கட்டிடம்‌ கட்டப்பட வேண்டும்‌ என்பதே இப்பகுதி மக்களின்‌ நீண்ட நாள்‌ கோரிக்கையாகும்‌.

எனவே, வழக்கு நடைபெறும்‌ நிலையில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கட்டிடம்‌ கட்டுவதற்கு வேறு ஏதேனும்‌ வழி உள்ளதா என்று, சென்னையிலிருந்து வந்து, தலைமை பொறியாளர்‌ அவர்களும்‌ நானும்‌ இன்றைய தினம்‌ ஆய்வு செய்துள்ளோம்‌. இக்கட்டிட கட்டுமானப்‌ பணிகள்குறித்து மேல்நடவடிக்கை மேற்கொள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ கவனத்திற்கு கொண்டு செல்பப்படும்‌.

விழுப்புரம்‌ மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக்‌ கொண்டு ஒரு புதிய மாவட்டம்‌ உருவாக்கப்பட வேண்டுமென்ற மக்களின்‌ நீண்ட நாள்‌ கோரிக்கையை நிறைவேற்றும்‌ விதமாக இம்மாவட்டம்‌ உருவாக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின்‌ வளர்ச்சிப்‌ பணிகள்‌ விரைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும்‌, பொதுமக்களின்‌ கோரிக்கைகள்‌ உடனுக்குடன்‌ நிவர்த்தி செய்யப்பட்டு நலத்திட்ட உதவிகள்‌ வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர்‌ அவர்கள்‌ தெரிவித்தார்‌.

இவ்வாய்வின்போது, சென்னை பொதுப்பணித்துறை (கட்டிடங்கள்‌) முதண்மை தலைமை பொறியாளர்‌ திரு. விஸ்வநாதன்‌, வேலூர்‌ மண்டல கண்காணிப்பு பொறியாளர்‌ திரு. கல்யாணசுந்தரம்‌, விழுப்புரம்‌ பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்‌ திரு. பாரதி, கள்ளக்குறிச்சி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்‌ திரு. கெளதமன்‌ மற்றும்‌ அரசு அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.