சின்னசேலம்நமது மாவட்டம்

மாட்டிய மானுக்கு தண்ணீர் ஊட்டிய இளைஞர்கள் !

Deer News 25.06.2020
Deer News 25.06.2020

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள வரஞ்சரம் கிராம பகுதியில் அடிக்கடி மான்கள் ஊருக்குள் தண்ணீர்  தேடி வருகிறது.இந்த நிலையில் அப்படி வரும் மான்கள் நீருக்காக கிணற்றில் தவறி உயிரிழப்பதுவும் வழக்கமாக உள்ளது .எனினும் அதே கிராம பகுதிகளுக்கு வரும் மான் களை ஊருக்குள் இருக்கும் நாய்கள் துரத்தி கடிப்பதாகவும் இதனால் மான்கள் காயமடைந்துள்ளதாகவும் சில மான் கள் உயிரிழப்பதாகவும் தெரியவருகிறது.இந்த நிலையில் தண்ணீர் தேடி  நேற்று ஊருக்குள் புகுந்த புள்ளி மான் ஒன்றை அதே பகுதியில் நாய் ஒன்று கடித்தது இதனால் காயமடைந்த மானை அக்கிராம இளைஞர்கள் மீட்டு  புள்ளி மானுக்கு தண்ணீர் குடிக்க வைத்து  பிறகு வனதுறையினரிடம் ஒப்படைத்தனர் .பிறகு அவர்களை மானை அருகே உள்ள காப்பு காட்டில் சென்று பாதுகாப்பாக விட்டனர் ..மேலும் வன துறையினர் சார்பில் காப்பு காடுகளில் விலங்குகளுக்கு தண்ணீர் தாகம் தீர தண்ணீர் தொட்டிகளில் நீர் நிறப்ப வேண்டும் எனவும் ,மான் களை பாதுகாத்து உயிரிழப்பு களை தடுக்க வன துறையினர் முன் வர வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுகக்கின்றனர்

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles