செய்திகள்தமிழகம்

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் அடக்கம்..

அப்துல் கலாமின் மூத்த சகோதரர் உடல் அடக்கம்

முத்து மீரான் லெப்பை மரைக்காயர்

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பள்ளிவாசல் தெருவில் வசித்து வந்த இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5-ம் தேதி தனது 104-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். வீட்டிலேயே சிகிச்சையில் இருந்த அவர் நேற்று இரவு காலமானார்.

அவரது மறைவு குறித்த தகவல் கிடைத்ததும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் உடல் இன்று பகல் 11 மணிக்கு அதே பகுதியில் உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டது. இதில் பலரும் கலந்து கொண்டனர்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தனது அண்ணன் மீது மிகுந்த அன்பு கொண்டவர். இதனால் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ராமேசுவரம் வரும் அரசியல் பிரமுகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயரை சந்தித்து செல்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Leave a Reply

Related Articles