நமது மாவட்டம்கள்ளக்குறிச்சி

மருந்தக கடையில் பிரிண்டர் மெஷின் வெடித்ததால் தீ விபத்து !

மருந்தக கடையில் பிரிண்டர் மெஷின் வெடித்ததால் திடீரென தீ விபத்து !

தீ விபத்து

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் இருக்கிறது தனியார் மருந்து கடை .நேற்று இரவு வழக்கம் போல் கடையை கடையின் உரிமையாளர் பூட்டி விட்டுச் சென்றுள்ளார் . இந்த நிலையில் திடீரென காலையில் கடையில் இருந்து கரும்புகை வெளியேறுவதாக அருகாமையில் இருப்பவர்கள் கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த கடையின் உரிமையாளர் முகமது இசாக் கடையை திறந்து பார்த்தபோது கடை முழுவதும் எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கடையில் எறிந்து கொண்டிருந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் .மேலும் இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக கடையில் இருந்த பிரிண்டிங் மிஷின் நிறுத்தாமல் கடை ஊழியர் சென்றதால் பிரிண்டிங் மிஷின் சூடாகி வெடித்ததுள்ளதால் கடையினுள் இருந்த பொருட்கள் எரிய ஆரம்பித்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.தீ விபத்தில் சுமார் 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்ததுள்ளதாகவும் முழுமையாக கூற முடியவில்லை எனவும் தகவல் தெரிவிக்கபடுகிறது.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles