இந்தியாசெய்திகள்

கோவாக்சின் தடுப்பூசியை பயன்படுத்த மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு நிபுணர் குழு பரிந்துரை!!

கோவாக்சின் தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த பரிந்துரை

covaxine-covishield-has-been-approved-for-emergency-use

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியான கோவாக்சினை அவசரகால தேவைக்கு பயன்படுத்த மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு நிபுணர் குழு பரிந்துரை அளித்தது.

கொரோனா தடுப்பூசிகளின் தன்மைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு, நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ளது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்டிராஜெனகா நிறுவனத்துடன் இணைந்து கொரோனாவுக்கு தடுப்பூசியை உருவாக்கியது. அந்த மருந்தை இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்து வருகிறது. இந்த மருந்தை அவசரகால தேவைக்குப் பயன்படுத்துவதற்கு நேற்றுமுன்தினம் நிபுணர் குழு ஒப்புதல் அளித்தது.

இதேபோல பாரத் பயோடெக் நிறுவனம் ஐசிஎம்ஆருடன் இணைந்து தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசிக்கும் நிபுணர் குழு நேற்று ஒப்புதல் அளித்தது. தடுப்பூசியை உருமாற்றம் பெற்ற கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரத் தேவைக்கு மட்டும் அதிகபட்ச முன்னெச்சரிக்கையுடன் பயன்படுத்திக்கொள்ளலாம் என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

Show More

Leave a Reply

Related Articles