நமது மாவட்டம்கள்ளக்குறிச்சி

போதுமான விலையில்லாததால் கட்டி வெல்லம் ஏற்றுமதி பாதிப்பு…..

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தச்சூர் கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவர் வெல்ல கட்டிகல் செய்து ஏற்றுமதி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.கொரோனா ஊரடங்கால் வெல்லத்தின் விற்பனை குறைந்து விட்டதாகவும் இதனால் ஏற்றுமதியும் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆடி மாதம் முதல் தை மாதம் வரையில் விற்பனை அதிகரித்து காணப்படும் ஆனால் இந்தாண்டு சரியான விற்பனையில்லை எனவும் இதனால் ஏற்றுமதி பாதிக்கபட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்தார், ஊரடங்கு காலத்திலும் 10 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்டு வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் ஆனால் போதுமான லாபம் இல்லாமல் இருப்பதாகவும், கிலோ 65 ரூபாய்க்கு விற்பனையான வெல்லம் தற்போது 45ரூபாய்க்கு விற்பனையாவதால் லாபம் ஈட்டமுடியவில்லை என தெரிவித்தார்,மேலும் சிறு தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்..

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles