குற்றம்செய்திகள்தமிழகம்

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் அதிமுக பிரமுகர் உட்பட மேலும் 3 பேர் கைது!!

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உட்பட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

 

3-more-arrested-in-pollachi-rape-case

கடந்த 2019ஆம் ஆண்டு இளம்பெண் ஒருவர், தன்னை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பொள்ளாச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கில் வசந்த்குமார், சபரிராஜன், சதீஷ், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகியோரை கைது செய்த சிபிசிஐடி காவல்துறையினர், அவர்களை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பல இளம்பெண்களை ஏமாற்றி பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததும், அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி வந்ததும் தெரியவந்தது. இந்த பாலியல் கொடூர வழக்கு தமிழகத்தையே அப்போது உலுக்கியது.

image

இந்த வழக்கில் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் விசாரணையை சிபிஐ கையில் எடுத்தது. சிபிஐ கடந்த ஆண்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மேலும் 3 பேர் பிடிபட்டுள்ளனர். அதிமுக பொள்ளாச்சி நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம், அவரது கூட்டாளிகள் ஹேரன் பால், பாபு என்கிற மைக் பாபு ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் இரவோடு இரவாக கைது செய்துள்ளனர்.

அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும், இன்றே சிறையில் அடைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles