நமது மாவட்டம்கள்ளக்குறிச்சி

பைக்கில் சென்ற நபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பலி!!!

கள்ளக்குறிச்சி நகரப்பகுதியை சேர்ந்தவர் மாதவன் மகன் கார்த்திகேயன்,30; இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் கோயம்புத்துாரில் உள்ள பிரிண்டர் கடையில் பணிபுரிந்த வந்த நிலையில், தற்போது ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் வீட்டில் இருந்துள்ளார்.ஊரடங்கு தளர்வினால் திரும்பவும் மே மாதம் வேலைக்கு சென்றுவிட்டு, மீண்டும் நேற்று முன்தினம் மாலை டி.என்38 பிஎஸ்9493 என்ற பதிவெண் கொண்ட ஹூரோ இக்னேட்டர் பைக்கில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பாண்டியன்குப்பம் பைபாஸ் மேம்பாலத்தில் சென்று கொண்டிருக்கும் போது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் கார்த்திகேயன் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்த சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கார்த்திகேயனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles