Othersசின்னசேலம்நமது மாவட்டம்

பூட்டிய டாஸ்மாக்- திறந்த திருடன் !!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள பெரிய சிறுவத்தூர் கிராமத்தில் ஊருக்கு வெளியே உள்ளது அரசு மதுபான கடை .இக்கடையில் கடந்த ஒராண்டுக்குள் இரண்டாவது முறையாக திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது.ஊருக்கு வெளியே தனி நபரின் வாடகை வீட்டில் இயங்கி வரும் இத் டாஸ்மாக் கடையை நேற்று வழக்கம் போல இரவு 8 மணிக்கு பூட்டிவிட்டு சென்றார் கடையின் ஊழியர் .இந்த நிலையில் திடிரென இன்று காலை அவ்வழியாக சென்ற சிலர் கடையின் பூட்டு உடைக்கபட்டிருந்ததை கண்டு காவல் துறையினருக்கு ,டாஸ்மாக் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர் .இந்த நிலையில் கடைக்கு சென்று பார்த்த கடையின் ஊழியர் கடையின் பூட்டு உடைக்கபட்டுள்ளது தெரியவந்தது பிறகு உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த இருந்த குவாட்டர் பாட்டில் பெட்டிகள் மற்றும் பீர் பாட்டில்கள் திருடு போனது தெரியவந்தது.சுமார் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான டாஸ்மாக் மதுபானங்கள் திருட பட்ட சம்பவம் குறித்து சின்ன சேலம் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

Tasmac Theft News 25.06.2020
Tasmac Theft News 25.06.2020
Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles